search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சரவை ஒப்புதல்"

    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்  டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நன்றி தெரிவித்துள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

    கடந்த ஜூன் 20-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரத்து 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.



    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, பாதுகபபு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி.

    மேலும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  2 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



    விலைவாசி உயர்ந்துவிட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்திற்கு 6112 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். பென்சன்தாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி கொடுப்பதால் வருடத்திற்கு 4074 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet

    ×